செய்தியாளர்களிடம் மனம் திறந்த ஷகிப், “அணிக்குள் புதிய வீரர்களைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம். டி20 போட்டிகளுக்கும் இதுதான் எனது பார்வை. தலைமை தேர்வாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் போர்டு (BCB) தலைவரிடம் பேசினேன். அணியிலிருந்து வெளியேறுவதற்கும், புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவருவதற்கும் இதுவே சரியான நேரம் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். டாக்காவிலுள்ள மிர்பூரில் எனது கடைசி டெஸ்டில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை அது நடக்கவில்லையென்றால், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே எனது கடைசி டெஸ்ட்.

வங்கதேசத்துக்கு நான் மீண்டும் செல்வது பற்றி கவலையில்லை. ஆனால், அங்கு நான் சென்ற பிறகு நாட்டை விட்டு வெளியேறுவது ஆபத்தானது. எனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் எனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். வங்கதேச கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. டெஸ்டில் எனது கடைசி ஆட்டத்தை சொந்த மண்ணில் ஆட விரும்புகிறேன்” என்றார்.
கடந்த ஜனவரியில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற ஷகிபுக்கு, வங்கதேச கலவரத்துக்குப் பின்னர் தற்போது நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதாகப் பேச்சுக்கள் அடிபட்டதும், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலுக்கு இருக்காது என BCB சமீபத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41