இலங்கை: ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி – தமிழர் ஆதரவு யாருக்கு?

Share

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024
படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை (எஸ்எல்பிபி) சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

ஆனால், 2022ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் (ஜனதா அரகலய) இறங்கினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிக் கொள்ள, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com