பீகாரின் முன்னாள் முதல்வரும் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்-ன் மகன் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் தனியார் நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடினேன். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவ்வளவு ஏன் என் கேப்டன்சியின் கீழ் வீராட் கோலியே விளையாடியிருக்கிறார். பிரபலமான பல கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய பேட்சை சேர்ந்தவர்கள். என் கால்முட்டுகளின் ஜவ்வு கிழிந்ததால் என்னால் தொடர்ந்து விளையாடமுடியவில்லை” எனப் பேசியிருந்தார்.
அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து பலரும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து தேடத் தொடங்கியிருக்கின்றனர்.
2008-ம் ஆண்டின் தொடக்க ஐ.பி.எல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்)-க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2012 வரை அதில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு ஆட்டத்திலும் கூட விளையாடவில்லை. ஆரம்பத்தில் ஜார்கண்ட் அணிக்காக ஒரு முதல் தர போட்டி, இரண்டு லிஸ்ட் ஏ போட்டி, நான்கு டி20 போட்டிகளில் விளையாடி 37 ரன்களையும், ஒரு விக்கெட்டும் எடுத்திருக்கிறார். 2009-ம் ஆண்டு திரிபுராவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். 2010-ம் ஆண்டு திரிபுராவுக்காக விளையாடினார். அவருக்கு முட்டுக்கால் தசை கிழிந்ததால் கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு விலகி தந்தையின் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது பீகாரின் முக்கிய அரசியல் முகமாக அறியப்படுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY