அரவிந்த் கேஜ்ரிவால்: சிறையில் இருந்தபடி 5 மாதம் ஆண்ட இவர் ஜாமீனில் வந்ததும் ராஜினாமா ஏன்? ஓர் அலசல்

Share

அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்

2014 பிப்ரவரி 14 – அரவிந்த் கேஜ்ரிவால் முதல் முறை டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நாள்.

அப்போது மழைக்கு மத்தியில் தொண்டர்களிடையே பேசிய கேஜ்ரிவால், “நண்பர்களே, நான் மிகவும் சிறியவன். நான் நாற்காலிக்காக இங்கு வரவில்லை. ஜன் லோக்பால் மசோதாவுக்காக இங்கு வந்துள்ளேன். இன்று லோக்பால் மசோதா வீழ்ந்துவிட்டது. நமது அரசு ராஜினாமா செய்துவிட்டது. லோக்பால் மசோதாவுக்காக நூறு முறை கூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். இந்த மசோதாவுக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அப்போதுதான் உருவாகியிருந்தது. அவரது அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கேஜ்ரிவாலிடம் இருந்தது. அது நடக்கவும் செய்தது.

அது நடந்து இப்போது பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி பல்வேறு அரசியல் முயற்சிகளில் முன்பை விட அதிக அனுபவம் பெற்றுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com