make beard pakoda for evening snacks

Share

பிரெட்டை வைத்து பல ரெசிபிகளை செய்யலாம். அதுவும் அவை நம் நாவை தூண்டக்கூடிய சுவை மிகுந்தவையாக இருக்கும். சாண்ட்விச், பிரெட் பஜ்ஜி, டோஸ்ட் என பிரெட் சாட் வகைகளுக்கு பெயர் போனது. இந்த வரிசையில் பிரெட்டை வைத்து பகோடாவும் செய்யலாம் என்பது தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் – 5

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

பெருங்காயத்தூள் – 1/4 tsp

சீரகம் – 1/2 tsp

கடலை மாவு – 4 tbsp

உப்பு – தே.அ

செய்முறை :

பிரெட் துண்டுகளை பிச்சி மிக்ஸி ஜாரில் கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொள்ளுங்கள். இப்போது அதில் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, சீரகம் , உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் தெளித்துக்கொள்ளலாம்.

மீதமான சாதத்தில் பணியாரம் செய்யலாமா..? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க…

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். நன்கு காய்ந்ததும் மாவை பிசைந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து கடாயில் பகோடா போல் போடுங்கள்.

பின் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து கிண்ணத்தில் போடவும்.

அவ்வளவுதான் பிரெட் பகோடா ரெடி.

 

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com