கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்

Share

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க பல்வேறு மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் 78 மாவட்ட தேமுதிக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது, தேமுதிகவின் எதிர்காலம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும், உள்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சியை வலுவாக வழி நடத்திச் செல்வதற்கு ஏதுவாக பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில், ‘‘பருத்தி ஏற்றுமதியை குறைத்து, பதுக்கலை நீக்கி, பருத்தி தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டும். தமிழக மக்களையும், மாணவர்களையும் மின்வெட்டில் இருந்து காப்பாற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com