சிவப்பரிசி இடியாப்பம், மூலிகை குழம்பு, புரொக்கோலி டிக்கி, வெற்றிலை கேசரி, வரகரிசி பாயசம், தந்தூரி பைனாப்பிள் செருணி, பாசிப்பருப்பு பீட்சா, ஆப்கானி சிக்கன் கிரேவி, சிக்கன் பொலிச்சது, கருப்புகவுனி தயிர் சாதம், வாழைக்காய் கோலா உருண்டை, கருப்புகவுனி அல்வா, மிளகு மஸ்ரூம் குலாபா, சேலம் உக்களி, சொரக்காய் கோப்தா, மொசுமொசுக்கு கீரை தோசை, முடவாட்டு கிழங்கு ராஜ்மா கறி, போலோ எண் பெபிடோரியா, போம்மஸ் குரோகுட், கோக்கனட் சிக்கன் ஃப்ரை, சக்கரவள்ளி கீர் என ஒரு ரவுண்ட் வந்து முடித்தபோது கண்கள் நிறைந்துவிட்டன.
இதற்கு முந்தைய போட்டிகளில் முதல் சுற்றில் தவறவிட்ட சில போட்டியாளர்கள், சேலத்தில் மீண்டும் பங்கேற்று தேர்ச்சி பெற்று இரண்டாவது சுற்றுக்குச் சென்றது சுவாரஸ்யம்.
இதுவரை பல ஊர்களில் நடந்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகளில், ஒவ்வொரு முறையும் மூன்று நபர்கள் மட்டுமே சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், சேலத்தில் நடைபெற்ற போட்டியில் பானு ரேகா, சரவணன், நந்தினி, கோகிலா ஆகிய நான்கு பேர் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளனர். மேலும் முதல் சுற்றிலிருந்து நேரடியாக இறுதிச் சுற்றில் பங்கேற்க ஜன்னத்துல் பிர்தௌஸ், ஆயிஷா துஹைரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆக மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் காத்திருக்கின்றன.