கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்… உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?! |2 New covid variants affects American peoples

Share

“JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86-க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே, அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியைவிட JN.1-க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார். 

இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், “நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய வேரியன்ட்கள் வந்துகொண்டேதான் இருக்கும். முந்தைய வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள புதிய வேரியன்ட்கள் சிறிய மாற்றங்களைக் கொண்டுள்ளன.

தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் புதிய வேரியன்ட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை சிடிசி மற்றும் பிற ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் விரைவாக எச்சரிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளது.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com