How to: பெண்ணுறையைப் பயன்படுத்துவது எப்படி? | How to use female condom? | How to use a female condom? What are the benefits?

Share

Female condom என்று சொல்லப்படக்கூடிய பெண்ணுறையை எப்படிப் பயன்படுத்துவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் பெண்ணுறையை உட்செலுத்துதல் மற்றும் வெளியே எடுத்தல் ஆகியவை குறித்த கையாளும் முறையைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நந்தினி ஏழுமலை விளக்குகிறார்.

“நமது நாட்டில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஆணுறையைப் போலவே பெண்களுக்கென்று பெண்ணுறை இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனை எவ்விதம் கையாள்வது என்பது தெரியாததால் பலரும் அதனைப் பயன்படுத்துவதில்லை.

பெண்ணுறை (Representational Image)

பெண்ணுறை (Representational Image)
Photo by Reproductive Health Supplies Coalition on Unsplash

பெண்ணுறை என்பது குழாய் போன்றிருக்கும். அதன் இரு முனைகளிலும் உள் வளையம், வெளி வளையம் ஆகிய இரண்டு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தை விரல்களில் பிடித்துக் கொண்டு பெண்ணுறுப்புக்குள் நுழைத்து கர்ப்பப்பை வாய் வரை கொண்டு செலுத்த வேண்டும். வெளி வளையம் பெண்ணுறுப்பின் முகப்பில் இருக்கும்.

இன்றைக்கு நாப்கினைப் போலவே டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரேஷன் கப் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே முறையில்தான் பெண்ணுறையை உட்செலுத்த வேண்டும். டாம்பூன் மற்றும் மென்ஸ்ட்ரல் கப் பயன்படுத்துகிறவர்கள் பெண்ணுறையை எளிதாகக் கையாளலாம். அதனைப் பயன்படுத்ததாதவர்களுக்கும் பெண்ணுறை பயன்படுத்துவது கடினமான செயல் இல்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com