1970-80களில் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். இவர் ‘தம்மர தம்’ என்ற பாடலில் ஆடிப்பாடி அந்தக் காலத்து இளைஞர்களைக் கிறங்கடித்தவர். பல படங்களில் கவர்ச்சியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். தற்போது 70 வயதாகும் இவர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இவருக்குக் கண்ணில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் நேற்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு அவரின் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ கடந்த மே 18-ம் தேதி வோக் (Vouge) இந்தியாவின் அட்டைப்படத்துக்காக நான் போட்டோஷூட் செய்தேன், 19- மே அன்று அதிகாலையில் எழுந்து ஒரு சிறிய சூட்கேஸில் என் உடைகளை எடுத்துக்கொண்டேன். பிறகு ஜஹானும் காராவும் என்னை ஹிந்துஜா மருத்துவமனைக்கு காரில் அழைத்துச்சென்றனர். கடந்த 40 ஆண்டுகளாக என்னுடன் ஒரு யானை இருந்தது, இந்த யானைக்கு இப்போது கதவைத் திறந்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.