`நெஞ்சு முடி ரொட்டி’ பனீர் தயாரிப்பில் லுங்கியோடு அமர்ந்திருந்த நபர்… வைரலான புகைப்படம்..! |Viral photo: Man Sitting on Raw Paneer, netizen reacts

Share

“இதைப் பார்த்த பிறகு பிராண்டடு அல்லாத பனீர் வாங்கப் போவதில்லை” என குறிப்பிட்டு போஸ்ட் செய்துள்ளார் ஒருவர். இந்தப் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நாம் வாங்கிப் பயன்படுத்தும் உணவுகள் மீதான சுகாதாரம் குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது. 

இந்தப் புகைப்படத்தில் `கான்பூர் உ.பி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது உத்தரபிரதேசத்தில் தான் நிகழ்ந்ததா என்பது துல்லியமாகத் தெரியவில்லை. 

இந்தப் பதிவுக்குப் பலரும் கமென்ட் செய்துவரும் நிலையில் ஒருவர், எப்போதும் ரோட்டுக்கடை உணவுகள் மற்றும் அவற்றின் தரம் மட்டுமே கேள்விக்குறியாக்கப்படுவதை எதிர்த்து, `பிராண்டடு பனீர் மீது விலையுயர்ந்த ஷூக்களை வைத்திருப்பவர்கள் உட்காருவார்கள்’ என்று கேலி செய்திருக்கிறார். அதோடு `உணவுகளின் சுகாதாரம் குறித்து கவனமாக இருங்கள்” என சிலர் எச்சரித்து வருகின்றனர். 

விரும்பி சாப்பிட்ட ஓர் உணவை அதன் தயாரிப்புமுறையைக் கண்ட பின் சாப்பிடவே கூடாது என பலரும் முடிவு செய்திருப்பார்கள். சிலர் அப்பளத்தைக் கால்களில் மிதிப்பதைப் பார்த்தேன், அதிலிருந்து பிடிப்பதில்லை என்பார்கள்.  சிலர் பானி பூரி அழுக்கான கைகளிலேயே எடுத்துத் தருகிறார்கள் அதனால் பிடிப்பதில்லை என்பார்கள். 

ஒவ்வொருவரும் `நெஞ்சு முடி ரொட்டி’ போன்ற சம்பவத்திற்குப் பின் சில உணவுகளை வெறுத்திருப்பர். இப்படி உணவுத் தயாரிப்புகளை கண்ட பின் நீங்கள் வேண்டாமென்று ஒதுக்கிய உணவுகள் உண்டா?!… கமென்ட்டில் சொல்லுங்கள்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com