இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த பெண்.. யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?! |A woman entrepreneur in the list of the top 10 richest people in India

Share

உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2023-ஐ புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் 7.13 லட்சம் கோடியோடு முகேஷ் அம்பானி முதலிடத்திலும், 5.17 லட்சம் கோடியோடு கெளதம் அதானி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஷபூர் மிஸ்ட்ரி, ஷிவ் நடார், அசிம் பிரேம்ஜி, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷங்வி, சாவித்ரி ஜிண்டால், லட்சுமி மிட்டல், ராதாகிஷன் தமானி ஆகியோர் தொடர்ச்சியாக மூன்று முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்ணாக இடம்பிடித்துள்ளார், சாவித்ரி ஜிண்டால். ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கும் சாவித்ரி 1.55 லட்சம் கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பைப் பெற்று இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com