நிறைய பேருக்கு வயசுக்கே வராம சிறுமி எப்படி கர்ப்பமாகியிருக்க முடியும்னு சந்தேகம் வந்திருக்கும். ஒரு கரு முட்டை உருவாகி, வெடிச்சு, அது கருவா உருவாகலைன்னாதான் மாதவிடாய் வரும். இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அந்தச் சிறுமிக்கு கருமுட்டை உருவாகி, அது வெடிச்சு முதல் மாதவிடாய் வரும் நேரத்துல தொடர்ந்து பாலியல் அத்துமீறுல் நடந்ததால, முதல் மாதவிடாய் வர்றதுக்கு முன்னாடியே கர்ப்பமாகிட்டா சிறுமி. இது மிக மிக அபூர்வம்தான். ஆனாலும் நடக்கிறதுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கு.
உங்கக் குழந்தைகள் அக்கம்பக்கம் விளையாடப் போறாங்கன்னா கவனமா இருங்க. குறிப்பாக, சிறுமிகளோட வயிறு பெரிசாக ஆரம்பிச்சா, ‘நம்ம பொண்ணு இன்னும் பெரிய மனுஷிகூட ஆகலையே’ என்று அப்பாவியாக இருக்காதீர்கள் பெற்றோர்களே” என்று எச்சரிக்கிறார் டாக்டர் காமராஜ்.