பக்கவாதம் என்பது நீடித்த மூளை பாதிப்பு. இதனால் பாதிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை உண்டாகலாம். சமயங்களில் படுத்த படுக்கையில் தள்ளி மரணம் கூட ஏற்படலாம். பக்கவாதத்தின் அறிகுறிகள் லேசான பலவீனம் முதல் உடலின் ஒரு பக்க உணர்வின்மை வரை வெவ்வேறு வகையில் இருக்கலாம்.
இந்த ஆய்வு குறித்து ஜோர்டான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் அஹ்மத் டூபாசி கூறுகையில், “இதற்கு முந்தைய ஆய்வு, காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டிற்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே ஒரு தொடர்பை நிறுவியுள்ளது.
இருப்பினும், குறுகிய கால காற்று மாசுபாட்டிற்கும் பக்கவாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறைவாகவே உள்ளது. எங்களது ஆய்வில் மாதங்கள், வாரங்கள் என காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டின் பாதிப்பை குறித்து ஆராயாமல், ஐந்து நாள்கள் என குறுகிய கால இடைவெளியை மட்டும் ஆய்வு செய்தோம்.
இதில் குறுகிய கால காற்று மாசின் வெளிப்பாட்டுக்கும் பக்கவாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்தோம். காற்று மாசுபாடு பக்கவாதம் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.