கோதுமை, கம்பு, சிவப்பரிசி, நவதானியம்… விதம்விதமான சுவைகளில் இடியாப்ப ஸ்பெஷல் விருந்து! | variety idiyappam special weekend recipes

Share

தேவையானவை:-

சிவப்பு பச்சரிசி மாவு – ஒன்றரை கப்

தேங்காய்த் துருவல் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – முக்கால் கப்

சர்க்கரை – தேவையான அளவு

சிவப்பு அரிசி இடியாப்பம்

சிவப்பு அரிசி இடியாப்பம்

ஒரு கிலோ சிவப்பு பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலரவைக்கவும். அரிசி நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் அல்லது மாவு மில்லில் கொடுத்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒன்றரை கப் மாவை எடுத்துக்கொள்ளவும். இனி அதனுடன், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, மிதமான சூட்டில் உள்ள நீரை விட்டு மாவை கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஆனால், கையில் ஒட்டக்கூடாது. பி்றகு, இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு இட்லித் தட்டில் மாவை பிழிந்துவிட்டு 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து இறக்கினால் சுவையான சிவப்பு அரிசி இடியாப்பம் தயார். சாப்பிடும்போது நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு ஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால்) ஊற்றி, நன்றாகக் கலந்து சாப்பிடவும். இதனை கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்தும் சாப்பிடலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com