Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!|Chris Pratt drinks 8 liter of water per day, doctors warn

Share

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவர் எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக் கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர். 

`குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவுக்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்” அல்லது `ஹைபோநெட்ரீமியா’ என்ற நிலை ஏற்படலாம்.

இது உங்களது ரத்தத்தின் சோடியம் அளவை நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் மூளை செல்கள் உட்பட உயிரணுக்களின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com