முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை – மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.
தினமும் பலர் தங்களது உடல் உறுப்புக்களை தானமாக தந்து உதவும் நிலையில், முதல்வர் அறிவிப்புக்கு பின் இறந்த வடிவேலின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்க சம்மதித்த அவரது குடும்பத்தினருக்கு மனமார நன்றிகளை அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல் உறுப்பு தானம் என்ற மகத்தான சேவையை ஊக்குவிக்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அப்போலோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.