அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
உறுப்பு தானம் செய்வோரும் சமூகத்திற்கான பங்களிப்பை அளிப்பவர்கள்தான். இப்போது, அரசு மரியாதை கொடுப்பதால், எல்லோரும் கவனிப்பார்கள். விழிப்புணர்வும் அதிகமாகும். இறந்தவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கெளரவம் கிடைக்கும்.
சமூதாயத்திற்கும் உறுப்புதானம் குறித்த சிந்தனை வரும். அதேநேரத்தில், அரசு மரியாதை என்ற அங்கீகாரத்துடன் உறுப்புதானம் செய்வோரின் குடும்பத்திற்குப் பணம் எல்லாம் கொடுக்கக்கூடாது. அப்படி எதிர்காலத்தில் அறிவிக்கவும் கூடாது. ஏனென்றால், இது ஒரு தானம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்குவது. இதனை பணம் கொடுத்து அங்கீகாரம் செய்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கட்டாய மூளைச்சாவும் நிகழலாம். அதனால், பண மரியாதை எல்லாம் வேண்டாம்.
அதேநேரம், உறுப்புதானம் செய்வோரின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுப்பது போலவே, அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த மருத்துவர்களுக்கும் அரசு ஊக்கத்தொகை அறிவிக்கவேண்டும். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள்” என்கிறார் கோரிக்கையாக.