மாவு கூட அரைக்க தேவையில்லை.. சுவையான கேரட் பணியாரம் செய்ய ஈஸியான ரெசிபி இதோ.!

Share

இட்லி, தோசை போரடித்தால் அடுத்தபடியாக நாம் செய்ய நினைப்பது பணியாரம் தான். பொதுவாக பணியாரம் 2 வகையில் செய்வோம். இனிப்பு பணியாரம் மற்றும் தாளித்த கார பணியாரம். இதை தவிர வித்தியாசமாக பணியாரம் செய்ய வேண்டுமென நினைத்தால் இந்த சுவையான கேரட் பணியாரத்தை நீங்கள் செய்து சுவைக்கலாம். இந்த பணியாரம் செய்வதற்கு மாவு அரைக்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது. இருக்கும் பொருட்களை வைத்து, நொடியில் மாவு கரைத்து சில நிமிடங்களில் பணியாரத்தை செய்தே முடித்திடலாம். குழந்தைகளும் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 2
  • மைதா மாவு – ஒரு கப்
  • சீனி – அரை கப் (அ) சுவைக்கேற்ப
  • பால் / தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவேண்டும் பின் தோல் சீவிய கேரட்டைச் சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு சிறிதளவு பால் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு அரைத்த கேரட்டுடன் சீனி மற்றும் மைதா மாவு சேர்க்கவும்.

பின் அதனை கேக் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவுக் கலவையை கையால் அல்லது கரண்டியால் சிறு உருண்டையாக உருட்டிப் போடவும்.

மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுலபமாகச் செய்யக்கூடிய, சுவையான கேரட் பணியாரம் ரெடி.

First published:

Tags: Carrot Recipes, Paniyaram Recipe in Tamil

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com