Doctor Vikatan: திடீரென நின்றுபோன வெயிட்லாஸ்… என்ன பிரச்னையாக இருக்கும்? | Doctor vikatan – Suddenly stopped weight loss- what is the problem?

Share

அடுத்தது, உணவுப் பழக்கம். தினமும் என்ன, எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு டைரியில் குறித்து வாருங்கள். ஒரு துண்டு கடலை மிட்டாய், இரண்டு பிஸ்கட் என எதைச் சாப்பிட்டாலும் டைரியில் குறிக்கத் தவறாதீர்கள். அதன் மூலம் நீங்கள் சாப்பிடுவதில் ஏதாவது தேவையற்ற உணவுகள் திடீரென சேர்ந்துள்ளனவா என்று தெரியும்.

மூன்றாவது நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் தூக்க சுழற்சி. எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பதை ஒரு ஆப் அல்லது ஸ்மார்ட் வாட்ச் மூலம் குறித்து வாருங்கள். தூக்க நேரத்தில் திடீரென தாறுமாறான மாற்றம் இருக்கிறதா என்பது தெரியும்.

அடுத்ததாக, ரத்தப் பரிசோதனை. தைராய்டு, அனீமியா, வைட்டமின் பி12 குறைபாடு, இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவற்றுக்கான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பது அவசியம். மலச்சிக்கல் பிரச்னையோ, வயிறு தொடர்பான வேறு பிரச்னைகளோ இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று சரிசெய்து கொள்ளுங்கள். எடைக்குறைப்பு முயற்சியில் பின்வாங்க வேண்டாம். மேற்குறிப்பிட்டவற்றைக் கண்டறிந்து சரி செய்தாலே, உங்கள் வெயிட்லாஸ் முயற்சி வெற்றி தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com