விநாயகருக்கு உகந்த தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெசிபி..!

Share

விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகள் வாங்கி , அழகாக அலங்கரிக்கப்பட்ட வண்ணக்குடையுடன் பல வகையான பூக்களால் பூஜை செய்து பல விதமான பலகாரங்களை செய்து விநாயகரை வழிபடுவதுதான் இந்நாளின் சிறப்பு.  இந்த விநாயகர் சதுர்த்தியின் தனித்துவமான விஷயமே பலகாரங்கள்தான்.  அதில்  விநாயகருக்கு பிரதானமாக படைக்கப்படுவது கொழுக்கட்டைதான். 

கொழுக்கட்டையில் பல விதங்கள் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் குறைந்த பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய கொழுக்கட்டைகளில் ஒன்றுதான் தேங்காய் பூரண கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்

உப்பு – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

பூரணம் செயவதற்கு…

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

வெல்லம் – 1/4 கப்

ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை

செய்முறை :

அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாகப் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கொதித்த நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து அதை அடுப்பில் வைத்து கிளறி முதிர்ந்து வற்றி வரும் போது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூடி, இட்லித்தட்டில் வேக வைத்து எடுத்தால் தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com