நாக்கைக் கடித்துக் கொண்ட பெண்… தொற்றுக்குள்ளாகி கோமாவுக்குச் சென்று மீண்டது எப்படி?|Woman Gets Deadly Infection After Biting Her Tongue

Share

இருந்தபோதும் கெய்ட்லின் நிலை மோசமடையத் தொடங்கி இருக்கிறது. அவரது தோல் சிவப்பு மற்றும் நீல நிறமாக மாறி உரியத் தொடங்கியுள்ளது. நாக்கும் கறுப்பாகி உள்ளது. பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், இவர் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான லுட்விக்ஸ் ஆஞ்சினா (Ludwig’s Angina) எனப்படும் பாக்டீரியா தொற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில் வாய், கழுத்து மற்றும் தாடைப்பகுதியும் பாதிப்படைவதோடு, நாக்கின் கீழுள்ள மென்மையான திசுக்களை வேகமாகப் பாதிக்கப்படும். இதற்கு சிகிச்சையளிக்கத் தவறும்பட்சத்தில், நாக்கு உயர்ந்து சுவாசப் பாதையை அடைத்து விடும்.

Treatment (Representational Image)

Treatment (Representational Image)
Image by Parentingupstream from Pixabay

பெரும்பாலும் குழந்தைகளைவிட பெரியவர்களையே இந்தத் தொற்று பாதிக்கும். கெய்ட்லின் அல்சோபுக்கு  வயதாகும்போது முளைக்கும் புதிய பல்லில் இருந்து தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. புதிய பல் முளைப்பது குறித்து ஏதும் அறியாமல் இருந்திருக்கிறார் அவர். 

நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க கெய்ட்லினை கோமா நிலைக்கு மருத்துவர்கள் தள்ளும் நிலை ஏற்பட்டது. 9 நாள்கள் வரை இவரை கோமாவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். இவரின் சுவாசப் பாதையையும், ஆக்ஸிஜனையும் பாதுகாக்க மருத்துவர்கள் இப்படிச் செய்திருக்கின்றனர். அதோடு மற்ற உறுப்புகள் ஏதும் வேலை செய்யாமல் நிறுத்துவதைத் தவிர்க்கவும் இவ்வாறு செய்திருக்கின்றனர்.

`இது ஒரு வகையில் மீண்டும் பிறப்பதற்குச் சமம்’ என தனக்குச் சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார், கெய்ட்லின். 

திகிலா இருக்கேப்பா என நினைக்கலாம். இருந்தாலும் உங்களது வாய் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com