Doctor Vikatan: எது முக்கியம்…. தூக்கத்தின் அளவா அல்லது தூங்கும் வேளையா? | amount of sleep or time of sleep, Which is more important?

Share

Doctor Vikatan: இன்று பலரும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அதனால் இரவில் தூங்க முடியாமல், காலையில் தூங்கி, மாலையில் விழிப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் சரியானதா? அவர்களுக்கு மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுமா? இரவுத்தூக்கம் தவிர்ப்போருக்கு உங்கள் அட்வைஸ் என்ன?

Uma , விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

மெலட்டோனின் என்பது தூககத்துக்கான ஹார்மோன். நம் மூளையின் ஒரு பகுதியான பீனியல் சுரப்பியிலிருந்து சுரக்கப்படுவது இது. பொதுவாக இரவு நேரம் தொடங்கும்போதுதான் இந்த ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். அதிகாலையில் 2 முதல் 4 மணி வரை அதன் சுரப்பு உச்சத்தில் இருக்கும். அதையடுத்து அது குறையத் தொடங்கும். “சர்கேடியன் ரிதம்’ எனப்படும் உடல் கடிகார சுழற்சியில் சாதாரணமாக இப்படித்தான் நடக்கும். அதனால்தான் காலையில் விழிப்புடன் இருக்கவும், இரவானால் தூங்க வேண்டும் என்றும் நம் உடல் நமக்கு உணர்த்தும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com