இவை தவிர புதிதாக ஏதேனும் ஓர் அறிகுறியை உணர்ந்தாலும் கவனம் தேவை. தோள்பட்டை வலி, அது இடது பக்க தோள்பட்டைதான் என்றில்லை, வலது பக்கத்தில் வந்தாலும் எச்சரிக்கையாக வேண்டும். பல் வலி, தாடை வலி போன்றவற்றையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
“இதெல்லாம் ஒண்ணுமில்லை’ என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டோ, மருத்துவரை பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ அலட்சியப்படுத்தாதீர்கள். அஜீரணமாக இருக்கும், வாயுப் பிடிப்பாக இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்யாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.
நீங்களே வாகனம் ஓட்டிக்கொண்டு மருத்துவரைப் பார்க்கச் செல்லாதீர்கள். அந்த நிலையில் அது சரியானதல்ல. ஒருவேளை அது ஹார்ட் அட்டாக்காக இருந்தால் இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை ஏற்படும். அது கார்டியாக் அரெஸ்ட்டில் முடியலாம். அதாவது இதயம் சரியாக பம்ப் செய்யாததால், மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, உடனடியாக மரணம்கூட நிகழலாம்.