சிந்தி பாணியில் இந்த நெய்மீன் குழம்பு செய்து பாருங்க… சுவை அள்ளும்

Share

சிக்கன் , மட்டன் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட மீன்களை விரும்பி சாப்பிடுவர். மீன்களை சமைக்கு விதம் இடத்திற்கு இடம் மாறுபடும். அந்தந்த பகுதியில் கிடைக்கும் மசாலாக்களை வைத்து மீன் வறுவல், குழம்பு, மீன் மசாலா, பிரட்டல் என்று சமைப்பர். இந்தியாவிலேயே மீன்களை சமைக்கும் முறைகள் மாறுபடும்.

ஆந்திரா பகுதியில் மிளகாய் அரைத்து மசாலா தயாரித்து அதில் சமைப்பார். கேரளாவில் தேங்காய் சேர்ந்து மசாலா செய்து  வாழை இலையில் மடித்து போலிச்சது செய்வார்கள். அதுவே கர்நாடகம் பக்கம் போனால் மிளகின் வாசம் தூக்கலாக இருக்கும். அந்த வகையில் இன்று சிந்தி பாணியிலான மீன் குழம்பு தான் சொல்ல இருக்கிறோம்.

சிந்தி மீன் குழம்பு  செய்யத் தேவையான பொருட்கள்

  • நெய்மீன் 6-7 துண்டுகள்
  • 3-4 பச்சை மிளகாய், நறுக்கியது
  • 3-4 பூண்டு கிராம்பு, பொடியாக வெட்டப்பட்டது
  • 2 தக்காளி விழுதாக்கப்பட்டது
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • தண்ணீர், தேவைக்கேற்ப
  • 1 கப் கொத்தமல்லி இலைகள்
  • உப்பு, சுவைக்க

சிந்தி மீன் குழம்பு செய்முறை : 

ராஜாமீன், சீர்மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி என்ற பெயர்களில் அழைக்கப்படும் நெய்மீனை நன்றாக கழுவி அதன் மேல் உப்பு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் மற்றும் எண்ணெய் கலந்து ஒரு கோட்டிங் மேரினேட் செய்யவும். இதை ஒரு மணி நேரம்  தனியாக வைத்துவிடவும்.

இதற்கிடையில், ஒரு மிக்சியில் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து, மென்மையான பேஸ்டாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாரினேட் செய்யப்பட்ட மீன் துண்டுகளை இருபுறமும் சமமாக வறுக்கவும்.

இதையும் பாருங்க : Vinayagar Chaturthi 2023 : இந்த விநாயகர் சதுர்த்தி படையலுக்கு இந்த 5 பலகாரங்கள் செஞ்சு பாருங்க..!

மற்றொரு கடாயில், தயார் செய்த கொத்தமல்லி விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் சேர்க்கவும். நன்றாக கலந்து சில நிமிடங்கள் சமைக்க அனுமதிக்கவும். அடுத்து, கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் தக்காளி விழுது  சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து, குழம்பு ஒரு கொதி வரும் வரை சமைக்கவும்.

மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் அடுக்கி அதன் மீது குழம்பு ஊற்றவும். கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும், சூடாக பரிமாரினால்  சிந்தி மீன் குழம்பு ருசிக்க தயார். இதை சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி இந்த குழம்போடு பிரட்டி சாப்பிட்டு பாருங்கள். 3 வேளைக்கு மதில் 5 வேளையாக சாதம் உள்ளே போகும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com