20 நிமிடங்களில் ஈசியாக செய்யக்கூடிய சுவையான குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் ரெசிபி

Share

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரம் குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

இந்த டிஷ் செய்ய வெளியில் சென்று நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆழம் தேவை இல்லை. இதற்கான பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கும். கொண்டைக்கடலை மற்றும் முட்டை கோஸ் இருந்தால் போதுமானது. சடசடவென்று 5 நிமிடத்தில் தயார் செய்து 20 நிமிடத்தில் முத்த வேலையும் முடிந்துவிடும்.

சனா தால் மற்றும் முட்டைக்கோஸ் டிக்கி தேவையான பொருட்கள்

  • 2 கப் கொண்டைக்கடலை ஊறவைத்தது
  • 1 கப் முட்டைக்கோஸ், பொடியாக வெட்டப்பட்டது
  • 1/2 கப் கேரட், பொடியாக நறுக்கியது
  • 6 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது
  • 1 கப் கொத்தமல்லி இலைகள்
  • 1 கப் வறுத்த கடலை மாவு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ருசிக்க உப்பு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை :

கொண்டைக்கடலையை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, பருப்பை அரைத்து, கரடுமுரடான பேஸ்ட்டை உருவாக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில், முட்டைக்கோஸ், கேரட், பச்சை மிளகாய், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் பேஸ்ட்டை சேர்த்து கலக்கவும்.

இதையும் பாருங்க : ஈவினிங் ஸ்னாக்ஸுக்கு 15 நிமிடத்தில் இதை ட்ரை பண்ணி பாருங்க

இப்போது, ​​சிறிது எண்ணெயை (1 டீஸ்பூன்) சூடாக்கி, அதனுடன் சீரகம் மற்றும் இஞ்சியைச் சேர்த்து ஒரு  1 நிமிடம் பொரிக்கவும். விதைகள் வெடித்ததும், இந்த எண்ணெய் கலவையை மாவு கலவையின் மீது ஊற்றவும். உப்பு சேர்த்து கிளறவும். இறுதியாக, வறுத்த கடலை மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது, ​​கலவையை சிறிய, வட்ட துண்டுகளாக பிரிக்கவும். டிக்கிகளை உருவாக்க கவனமாக தட்டவும். பின்னர் ஒரு

நான்-ஸ்டிக் பான் அல்லது தவாவில் எண்ணெயை சூடாக்கி, டிக்கிகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும். புதினா  சட்னி மற்றும்/அல்லது தக்காளி கெட்ச்அப்புடன் சூடாகப் பரிமாறவும். சுவையான ஸ்நாக்ஸ் தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com