Doctor Vikatan: மாமனாருக்கு லோ சுகர்; வாக்கிங் போகும்போது மயக்கம்… சர்க்கரை சாப்பிடுவது சரியானதா? | Low sugar; Dizziness while walk… Is it right to eat sugar?

Share

வாகனம் ஓட்டும்போது சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும். இன்னும் சில நிமிடங்களில் வீடுபோய்ச் சேர்ந்துவிடுவோம்… போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் மட்டும் வேண்டாம். ஐந்து நிமிடங்களில்கூட பேராபத்து நிகழலாம். விமானம் ஓட்டும்போது பைலட்டுக்கு லோ சுகர் ஆகி, விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் நம்மிடம் உண்டு. அந்த அளவுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தாழ்சர்க்கரை நிலை பிரச்னை.

லோ சுகர் பிரச்னையைத் தவிர்க்க சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைப்பதுதான் பிரதான வேலை. நீங்கள் சாப்பிட்டீர்களா, இல்லையா என்றெல்லாம் அவை பார்க்காது.

சர்க்கரை அளவு

சர்க்கரை அளவு

மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பது, மாத்திரை போட்டுக்கொண்டு தாமதமாகச் சாப்பிடுவது, இனிப்பு சாப்பிட்டுவிட்டு, ஒரு மாத்திரையை எக்ஸ்ட்ராவாக எடுத்துக்கொள்வது என்றெல்லாம் மாத்திரைகளையும் உணவையும் தவறாகக் கையாளும்போதுதான் இந்தப் பிரச்னை வருகிறது.

முதல்முறை லோ சுகர் வரும்போது உணர்ந்த அறிகுறிகளைத்தான் ஒவ்வொரு முறையும் உணர்வார்கள். அதை உணர்ந்ததும் உடனே எச்சரிக்கையாவதுதான் புத்திசாலித்தனமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com