Doctor Vikatan: கால் வீக்கம்… இதயச் செயலிழப்பின் அறிகுறியா? | Swollen Legs…Symptom of Heart Failure?

Share

Doctor Vikatan: என் வயது 56. அடிக்கடி கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. கால் வீக்கம் என்பது இதயநோயின் அறிகுறி என்கிறார்களே… உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

கால் வீக்கத்துக்கும் இதய பாதிப்புக்கும் நிச்சயம் தொடர்புண்டு. கால் வீக்கத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமானது “கன்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற பிரச்னை. அதென்ன ஹார்ட் ஃபெயிலியர்…என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

இதயம் சரியாக பம்ப் செய்யாததன் காரணமாக பல இடங்களில் நீர் தேங்கும். இதயத்தில் இடது, வலது என பல அறைகள் இருக்கும். இடப்பக்க அறை, உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை சப்ளை செய்யும். வலதுபக்க அறையிலிருந்து ரத்தமானது நுரையீரலுக்குப் போய் ஆக்ஸிஜன் சேர்ந்து சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இடப்பக்க அறைக்கு வரும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com