தண்ணீர் குடிக்காமல் மிகவும் காரமான சிப்ஸை சாப்பிட வேண்டும் என்ற டிக்டாக் சவாலை முயன்ற 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல சேலஞ்சுகள் பிரபலமடைவது வழக்கம். அந்தவகையில் `One chip challenge’ டிக் டாக்கில் பிரபலமடைந்து வருகிறது. உலகின் மிகவும் காரமான இரண்டு மிளகுகளின் கலவையில் செய்யப்பட்டுள்ள Pacqui சிப்ஸை தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த சேலஞ்ச்.
அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயதான ஹாரிஸ் வோலோபா, டோஹெர்டி மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் நண்பன் இந்த சேலஞ்சை செய்யச் சொல்லவே, அதை ஹாரிஸ் செய்திருக்கிறார்.
காரமான சிப்ஸை சாப்பிட்டவுடன் வயிற்று வலியால் துடித்ததும், பள்ளி நிர்வாகத்தில் இருந்த செவிலியரால் கவனிக்கப்பட்டுள்ளார். பின்னர் உடனடியாக அவரின் அம்மாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹாரிஸ் கொஞ்சம் நன்றாக உணர்ந்திருக்கிறார். அதனால் கூடைப்பந்து விளையாடப் புறப்பட்டபோது, சுயநினைவின்றி மயங்கி உள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கிச்சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.