புதுடெல்லி: கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜ ரூ.477.5 கோடியும், காங்கிரஸ் ரூ.74.50 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் சட்ட விதிகளின்படி, நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2020-21ம் நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்களை பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பாஜ ரூ.477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 77 நன்கொடையாக பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் ரூ.74 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 731 பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளது. பாஜவுக்கு கிடைத்த நன்கொடையில் 15 சதவீதம் மட்டுமே காங்கிரசுக்கு நன்கொடையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.