இனி சாதாரண பாயசம் வேண்டாம்.. அட்டகாசமான ரோஜா கீர் செய்து பாருங்க

Share

இனிப்புகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இனிப்பு உருண்டைகள், மிட்டாய்கள், லட்டு, மைசூர் பாக், ஜிலேபி என்று எதனை வகைகள் இருந்தாலும் விருந்து முடித்து குடிக்கும் பயத்தம் போன்ற ஒரு ருசிவராது. அப்படி அனைவரும் விரும்பி குடிக்கும் பாயசத்தில் ஒரு வித்தியாசமான ரெஸிபியைத் தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

பொதுவாக ஜவ்வரிசி, சேமியா, அவல், பாலடை போட்டு பாயசம் செய்து பார்த்திருப்போம். ஆனால் பூ வைத்து பாயசம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? ஆமாம் மக்களே மல்லிகை , ரோஜா, போன்ற பூக்களை வைத்து சுவையான வடஇந்திய ஸ்டைல் கீர் செய்வதை பற்றி தான் சொல்லப்போகிறோம்.

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் அரிசி
  • 1 1/2 லிட்டர் முழு கிரீம் பால்
  • சர்க்கரை-சுவைக்க
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொட்டைகள்
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 2 டீஸ்பூன் உலர் ரோஜா இதழ்
  • ரோஜா இதழ் (அலங்காரத்திற்காக)

கீர் செய்வது எப்படி?

அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது, ​​ஒரு அகலமான கடாயில் பாலை சூடாக்கி, கொதிக்க விடவும். அதே நேரம் சிறிய கடாயில் அரிசியை மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். அரிசியை பாலில் போட்டு குழையும் வரை வேக விடவும்.

இதற்கு இடையில் அரிசி பாதிக்கு மேல் வெந்ததும், நறுக்கிய காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.அரிசி முழுவதுமாக வெந்ததும், அதில் வெல்லம் அல்லது சக்கரையை பொடியாக்கி சேர்த்து நன்றாக கிளறவும் . ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து அதை ஆறவிடவும்.

இதையும் பாருங்க : Independence Day 2023 : சுதந்திர தினத்தில் பனீர் வைத்து இந்த ஸ்பெஷல் ரெசிபி செய்து பாருங்க

ஆடிய பின்னர் பிரிட்ஜில் வைத்து கூட பரிமாறலாம். பரிமாறும்போது பிரெஷான   ரோஜா இதழ்களை சிறிதாக வெட்டி கீரோடு கலந்து அதன் மீள் நறுக்கி வைத்துஇருக்கும் முந்திரி திராச்சை, பதம் தூவி சாப்பிட்டு பாருங்கள், மற்ற பாயசம் எல்லாம் தோற்றுவிடும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com