ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய வரலாற்று நினைவுச்சின்னங்களை மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பது, பெரிய தேசிய கொடிகளை ஏற்றுவது என்று இருக்கும். நம் சமையலறை தட்டுகளும் மூவர்ணத்தில் மிளிர்ந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பன்னீர் என்பது பிடிக்கும். அது எந்த வகையில் இருந்தாலும் ருசித்து உண்போம். அதுவும் டிக்கா செய்து ஈவினிங் ஸ்னாக்ஸ் அல்லது இரவு சப்பாத்தி அல்லது நானும் வைத்து சாப்பிடுவதை நினைத்து பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும். அதில் சுதந்திர ஸ்பெஷல் செய்தல் எப்படி இருக்கும்? செய்துவிடலாமா ..அதற்கான ரெசிபி இதோ…
திரங்கா பன்னீர் டிக்கா : தேவையான பொருட்கள்:
- சிவப்பு மரைனேஷன் – 20 கிராம்
- வெள்ளை மரைனேஷன் – 20 கிராம்
- கீரை விழுது – 20 கிராம்
- கிரீம் – 25 மிலி
- வெண்ணெய் – 25 கிராம்
- குடைமிளகாய் – 40 கிராம்
- கொத்தமல்லி – 8 கிராம்
- மிளகுத்தூள் (சிவப்பு மற்றும் மஞ்சள்) – 80 கிராம் (தலா 40 கிராம்)
- கஸ்தூரி மேத்தி – 5 கிராம்
- சீரகத் தூள் – 5 கிராம்
- கரம் மசாலா – 5 கிராம்
- கடுகு எண்ணெய் – 10 மிலி
- சிவப்பு மிளகாய் தூள் – 5 கிராம்
- உப்பு – சுவைக்கு ஏற்ப
- ஏலக்காய் தூள் – 5 கிராம்
செய்முறை :
சிவப்பு மரினேஷனைத் தயாரிக்க..காஷ்மீரி மிளகாயை வெந்நீரில் போட்டு மிருதுவாகும் வரை வெஃகணைத்து விழுதாக்கிக்கொள்ளவும். அந்த மிளகாய் விழுதை எடுத்து, அதில் புளித்த தயிர், கடுகு எண்ணெய், சாட் மசாலா, கருப்பு உப்பு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

வெள்ளை மரினேஷனுக்கு, முந்திரி விழுது, கிரீம், உப்பு , ஏலக்காய் தூள் மற்றும் வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
பச்சை மரைனேஷன் செய்ய, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கி பயன்படுத்தவும். அனைத்து கலவைகளையும் தனித்தனியாக அரைக்கவும்.
பின்னர் பன்னீரை எடுத்து நன்றாக க்யூப்களாக வெட்டவும். முடிந்ததும், பன்னீரின் அதே அளவு வெங்காயம் மற்றும் கேப்சிகத்தை நறுக்கவும். முடிந்ததும், பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்து முறையே சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை மரினேஷனில் 5-7 நிமிடங்கள் வைக்கவும்.
இதையும் பாருங்க : இந்த சுதந்திர தினத்திற்கு உங்க குழந்தைகளுக்கு இந்த சூப்பர் ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க
நன்றாக ஊறிய பிறகு, தந்தூர் கம்பிளில் செருகவும், அதை அனலின் மீது வைத்து சமைக்கவும். இல்லை என்றால் தோசை தவாவில் சிறிது என்னை ஊற்றி மிதமான தீயில் வைத்து புரட்டி புரட்டி வேகவைக்கவும். இதை குளிர்ந்த புதினா சட்னியுடன் சாப்பிட்டதால்.. அடடே.. மழை காலத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் சூப்பர் ஸ்நாக்ஸ் தான்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.