Doctor Vikatan: காரச்சுவையை அறவே தவிர்ப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is avoiding alkaline healthy?

Share

Doctor Vikatan: இனிப்பு, உப்புச்சுவைகளை சிலர் தவிர்ப்பதுபோல, வயதானவர்கள் சிலர் காரச் சுவையையும் அடியோடு தவிர்த்து உண்கிறார்களே… அதனால் பாதிப்பு வராதா?

– Meenakshi Mohan. விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

தமிழர்களின் உணவிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி, அறுசுவை என்பது அடிப்படை தத்துவம். ஒரு மனிதனுக்கு நோய் வருவதும் வராததும் அடிப்படையான இந்த ஆறு சுவைகளின் அடிப்படையிலும் பஞ்சபூதங்களின் அடிப்படையிலும்தான் கணிக்கப்படும். எனவே ஒருவர் தனது உணவில் இந்த ஆறு சுவைகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவர்களுக்கு நோய்கள் வராது.

இவற்றில் எந்தச் சுவையையும் அதிகமாகவும் சாப்பிடக்கூடாது, குறைத்தும் சாப்பிடக்கூடாது. அளவோடு இருக்க வேண்டியது அவசியம். அதைத்தான் `மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்று சொல்கிறார்கள். எந்தச் சுவையையும் அதிகமாகச் சாப்பிட்டால் அதன்மூலம் நோய் வரும். அந்தச் சுவையை அறவே தவிர்ப்பதாலும் நோய் வரும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com