தாயிலிருந்து குழந்தைக்கு பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்; தீர்வு என்ன? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 33 | Mother-to-child transmission of hepatitis B virus; What is the solution?

Share

HBsAg பாசிடிவ் மற்றும் Anti-HBs நெகடிவ்வாக இருப்பின், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோயுள்ளது உறுதிப்படுத்தப்படும். மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs பாசிடிவ்வாக இருப்பின் ஆன்டிபாடியின் அளவை கண்டறிய வேண்டும்; Anti- HBs titre 10 mIU/ml மேல் இருந்தால் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று இல்லை மாறாக தடுப்பூசிகளால் சிறந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதென அர்த்தம்; மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs titre 10 mIU/ml கீழ் இருந்தால், ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று இல்லை மாறாக தடுப்பூசிகளால் சரியான அளவுநோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லையென அர்த்தம்.

உலக சாதனை படைத்த புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழுவினர்

உலக சாதனை படைத்த புதுச்சேரி ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழுவினர்

எனவே, ஹெபடைட்டிஸ் பி வைரஸிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியூட்ட, குழந்தைக்கு மீண்டும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் போட வேண்டும். எனவே, இந்தப் பரிசோதனைகளை உங்கள் குழந்தைக்கு 9 மாதங்கள் ஆனவுடன், மருத்துவர் வழிகாட்டுதலில் தவறாமல் செய்துவிடுங்கள்.

இதைப்போல், ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று உள்ள நோயாளிகளிடம் இருந்து Needle Stick injury (தவறுதலாக ஊசி முனை கையிலோ/ நடக்கும் போது காலிலோ படலாம்) வழியாக ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கட்டாயமாக ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் மூன்று டோஸ்களை 0, 1 மற்றும் 6 மாதங்களில் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com