Doctor Vikatan: Children who puberty at an early age… Is there a treatment to delay it?

Share

இந்த பாதிப்பில் `சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி (central precocious puberty) மற்றும் `பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ (peripheral precocious puberty) என இருவகை உண்டு. நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் Gonadotropin hormone-releasing hormone (GnRH) என்ற ஹார்மோன் சுரக்கும்.

இது மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்களைத் தூண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்கள் இரண்டும் சினைப்பையைத் தூண்டுவதால் அதிலுள்ள புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் விடுவிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகுதான் முதல் பீரியட்ஸ் வருகிறது. இதை `ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி ஒவேரியன் அக்செஸ்’ என்று சொல்வோம். இது அடைபட்ட நிலையில் இருக்கும். அந்த அடைப்பு நீங்கி, ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் சுரக்கத் தொடங்குவதுதான் பூப்பெய்துவதில் நிகழ்கிறது. இந்தச் செயல் வழக்கமாக 8 வயதுக்குப் பிறகுதான் நடக்கும்.

பருவமடைதல்

பருவமடைதல்

ஏதோ காரணத்தால் இந்த நிகழ்வானது 8 வயதுக்கு முன்பே நிகழ்ந்தால் அதை `சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபெர்ட்டி’ என்று சொல்வோம். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் பல நேரங்களில் தெரியாது. சில நேரங்களில், மூளையில் கட்டி இருந்தாலோ, வேறு பாதிப்பு இருந்தாலோ இப்படி ஏற்படலாம்.

அடுத்தது பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி… மூளை தவிர்த்து, சினைப்பையில் இருந்து வேறு காரணங்களால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதைக் குறிப்பது இது. ஈஸ்ட்ரோஜென் க்ரீம் அல்லது சப்ளிமென்ட் உபயோகிப்பதால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். சினைப்பையில் கட்டிகள் இருந்தாலும் இப்படி ஆகலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com