பால் குடிக்க மறுக்கும் குழந்தை; ரத்த சர்க்கரை குறைவாக இருக்கலாம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 32 | child refuses to drink milk; Blood sugar may be low

Share

அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:

உடல் நடுக்கம், வலிப்பு, உடல் தளர்ச்சி, உடல் நீலமடைதல், பலவீனமான அல்லது உச்ச தொனியுடைய அழுகை, மூச்சுத் திணறல், சரியாக பால் குடிக்காமல் இருப்பது போன்றவை ரத்தச் சர்க்கரை குறைவின்போது ஏற்படும் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். 40 mg/dL-க்கு கீழென்றால், உடனடியாக, ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் கொடுக்கத் தொடங்க வேண்டும். அதன் பிறகு, 30 நிமிடங்கள் கழித்து, மீண்டும் ரத்தச் சர்க்கரையின் அளவு கண்டறிய வேண்டும்; மீண்டும் குறைவாக இருக்கும்பட்சத்தில், ரத்த நாளத்தின் வழியாக கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு கூட்டப்படும்.

அவ்வாறு கூட்டப்பட்டு IV Dextrose செலுத்தப்படும் வேகம் (Glucose Infusion Rate / GIR) 12 mg/kg/min மேல் சென்றால், அதனை எதிர்க்கின்ற ரத்தச் சர்க்கரை குறைவு (Resistant Hypoglycemia) என்றழைப்போம். Resistant Hypoglycemia-ல், ரத்தச் சர்க்கரை அளவினை உயர்த்திட, ரத்த நாளத்தின் வழியாகக் கொடுக்கப்படும் குளுக்கோஸுடன், கூடுதலாக Hydrocortisone, Diazoxide, Octreotide மற்றும் Glucagon முதலிய மருந்துகளில், குழந்தையின் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருந்துகள் தொடங்கப்படும்.

Resistant Hypoglycemia மற்றும் தொடர் ரத்தச் சர்க்கரை குறைவு உள்ள குழந்தைகளில், அதன் காரணம் கண்டறிய கூடுதலாக பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர் செய்து, தீவிர ரத்தச் சர்க்கரை குறை ஏற்பட்டதற்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிவர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com