Doctor Vikatan: விடாமல் தொடரும் அரிப்பு… ப்ரீ டயாபடீஸ்தான் காரணமா? | Doctor Vikatan: Persistent itching… Is pre-diabetes the cause?

Share

Doctor Vikatan: என் வயது 35. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டேன். அதில், எனக்கு ப்ரீ டயாபடீஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை என ரிசல்ட் வந்தது. மேலும், கடந்த ஓராண்டிற்கும் மேலாக, உடலில் வெயில் படும் இடங்களில் சருமத்தில்அரிப்பு இருக்கிறது. முதலில், அலோபதி டாக்டரிடம் காட்டியபோது, வெயிலால் ஏற்படுவது என்று கூறினார். எனவே, வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதுடன் தவறாமல் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துமாறும் சொன்னார்.

ஆனால், நாள்கள் செல்லச்செல்ல வெயில் படாத இடங்களிலும் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. இதையடுத்து சித்த மருத்துவரை நாடினேன். சில உணவு வகைகளைத் தவிர்க்குமாறு கூறியதுடன், சில மாத்திரைகளையும் வழங்கினார். தற்போது அரிப்பு குறைந்தாலும் நிரந்தரமாக குணமாகவில்லை. இந்த அறிகுறி, எதனால் வருகிறது… இதற்கும் நீரழிவு நோய்க்கும் தொடர்பு இருக்குமா?

Dinesh RM, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகும்போது சருமம் வறண்டு போகும். சரும வறட்சியின் காரணமாக அரிப்பு வரலாம். நீரிழிவு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் ஏதேனும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அரிப்பு வரலாம்.

சிலருக்கு நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் ஏதேனும் இருக்கலாம். அவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். சிலருக்கு நீரிழிவுடன் சொரியாசிஸ் என்கிற பாதிப்பும் சேர்ந்து வரும். அதிலும் அரிப்பு என்பது சகஜம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com