அப்போலோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்கோமா புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி! | A 5 km cyclothon was organised to create awareness about Sarcoma by apollo

Share

இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இந்நிகழ்வின்போது பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரிலும் மற்றும் அப்போலோ கேன்சர் சென்டரிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களது பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். சர்கோமா பற்றி விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் இந்நோய் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவும் ஒரு நல்ல தளத்தை ‘வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்’ சைக்கிளத்தான் நிகழ்வு வழங்குகிறது” என்று கூறினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ‘வின்னர்ஸ் ஆன் வீல்ஸ்’ சைக்கிளத்தான் 2023, 300-க்கும் கூடுதலான சைக்கிள் வீரர்களின் உற்சாகமான பங்கேற்பினால் நேர்த்தியான சாதனை நிகழ்வாக அமைந்தது. சர்கோமாவை சிகிச்சையின் மூலம் வென்று சாதித்தவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உறுப்பினர்கள் என பலதரப்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்க்கு எதிரான யுத்தம் என்ற குறிக்கோளின் மீது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் புற்றுநோயை தைரியத்துடன் எதிர்த்துப் போராடும் நோயாளிகள் இணைந்து வெளிப்படுத்திய ஒற்றுமை மெய்சிலிர்க்கச் செய்கிறது. ஒற்றுமை உணர்வோடு இந்நிகழ்விற்காக ஒருங்கிணைந்திருப்பது புற்றுநோய் வெல்லக்கூடியதே என்ற நம்பிக்கையையும் மற்றும் சர்கோமா பாதிப்பையும் கடந்து ஒளிமயமான எதிர்காலம் இந்நோயாளிகளுக்கு இருக்கிறது. என்ற உணர்வையும் வலுப்படுத்தியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com