வீட்டிலேயே மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு செய்ய எளிமையான ரெசிபி..!

Share

முட்டை என்று எடுக்கும்போது பொதுவாக ஆம்லெட், முட்டை  பொரியல், ஹால்ப் பாயில், கலக்கி, பிரெட் ஆம்லெட் தான் செய்து சாப்பிடுவோம். அதை தவிர்க்க பார்க்கும்போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட முட்டை குழம்பு வைப்போம். முட்டை குழம்பு என்றாலே மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு பேமஸான ஒன்று. 

அந்த ஸ்டைல், ருசி மாறாமல் எப்படி வீட்டில் வைப்பது என்ற குழப்பம் தோன்றும். அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். சூப்பராக அதே முறையில் முட்டைக் குழம்பு வைக்கும் ரெசிபியை இப்பொது உங்களுக்கு சொல்கிறோம்.

தேவையான பொருட்கள்

அவித்த முட்டை – 4

பட்டை – 1

கிராம்பு – 5

மிளகு – 1 டீஸ்பூன்

பூண்டு – 5 பற்கள்

தனியா- 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 8

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

புளி – 1

துருவிய முழு தேங்காய் – 1

எண்ணெய் – 4 டீஸ்பூன்

மல்லித்தழை – சிறிது

உப்பு – தேவையான அளவு

 மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பு செய்முறை: 

முதலில் ஒரு ஆதி கனமான கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் பட்டை,கிராம்பு, மிளகு, பூண்டு, தனியா, சீரகம் ,     வரமிளகாய் சேர்த்து மணம் வரும் வரை குறைந்த தீயில் வைத்து   வறுக்கவும். மணம் வந்த பின்பு புளி, மஞ்சள் தேங்காய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வறுத்து இதை நன்கு ஆறவிடவும்.

இது ஆறும் நேரத்தில் அவித்த முட்டையை லேசாக நான்கு பக்கம் கீறி ஒரு தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் போட்டு சில நிமிடங்கள் புரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

இப்போது வறுத்து ஆறிய கலவையை ஒரு மிக்ஸியில் போட்டு பொடியாக மாறும் வரை அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை போல விழுதாக அரைத்து எடுக்கவும். இது தான் நம்  மங்களூர் ஸ்டைல் முட்டை குழம்பின் அடிப்படை மசாலா. இப்பொது எல்லா தயாரிப்புகளும் முடிந்துவிட்டது. பாதி வேலை முடிந்தது.

இதையும் பாருங்க : நீங்க விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளெல்லாம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாம்..!

முட்டையை வறுத்த அதே தவாவில் அரைத்த விழுதை போட்டு அளவான நீர் விட்டு நன்கு கலந்துவிடவும். ஓரிரு நிமிடங்களில் குமிழ் போல குழம்பு கொதித்து வர வறுத்த முட்டையை இதில் போட்டு முட்டை உடையாமல் நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமாக வைத்து வாணலியை மூடி போட்டு மூடி விடவும்.

சில நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து வந்த நிலையில் தேவையான உப்பு சேர்த்து கிளறி இதன் மேல் மல்லித் தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவு தான் மணமணக்கும் மங்களூர் முட்டைக் குழம்பு ரெடி. இதை சோறு, இட்லி, தோசை, ரொட்டி வகைகளுக்கு வைத்து சாப்பிடலாம். வீட்டில் நிச்சயம் செய்து பாருங்கள்…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com