வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஏன் சென்னையில் திடீர் மழை? சூரியன் சொன்னது நீ அழகென்று அதனால் உன் பாதம் எட்டிப் பார்க்க கொட்டிய நீர்த்துளி தான் திடீர் மழையோ… உன் கூந்தல் பட்ட நீர் சொன்னது நீ அழகென்று அதனால்தான் தன்மானம் கொண்டு உன் தலை முடி நனைக்க வந்ததுதான் திடீர் மழையோ..
இப்படி எல்லாம் மனதில் தோன்றியதையெல்லாம் கிறுக்கல்களாக எழுதிக் கொண்டு.. மழையை ரசித்துக்கொண்டு(டே) சுட சுட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடலாமா…
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டே சுலபமாக செய்யக்கூடிய வகையில் சில ரெசிபிகள் இதோ உங்களுக்காக..
*முட்டைக்கோஸ் வடை
கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு – தலா ஒரு கப்
பச்சரிசி – அரை கப்
கோஸ் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் -4
பொடியாக நறுக்கிய மல்லித்தழை கருவேப்பிலை -சிறிதளவு
உப்பு , எண்ணெய் -தேவையான அளவு
கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் பொடியாக அரிந்த கோஸ் ,பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதனை மெல்லிய வடைகளாகத்தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும் சுவையில் அசத்தும் இந்த முட்டைகோஸ் வடை.
*பனீர் வெந்தயக்கீரை கட்லட்
பனீர் -அரை கிலோ
உருளைக்கிழங்கு- மூன்று வெந்தயக்கீரை- ஒரு சிறு கட்டு
மைதா -ஆறு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
மல்லித்தழை -ஒரு சிறு கட்டு
கரம் மசாலா- ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய் தூள் -ஒரு டீஸ்பூன்
ரஸ்க் தூள்-அரை கப்
உப்பு ,எண்ணை தேவையான அளவு.