மழைக்காலம் வந்துவிட்டது. தினமும் மழை சாரல் வீசி ஊரையே குளுமையாக வைத்திருக்கிறது. குளிர்ச்சியான சூழலில் சூடாகவும், கார சாரமாகவும் எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதே போல எந்த உணவாக இருந்தாலும் கூட கொஞ்சம் காரம் தூக்கலாக சைடு டிஷ் இருந்தால் இருக்கும்.
அதே போல தயிர் சாதம் முதல் சாம்பார் சாதம், பிரியாணி என்று எல்லா உணவுகளுக்கும் ஊறுகாய் ஒரு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் எலுமிச்சை, மாங்காய், பூண்டு, என்று பலவிதமான ஊறுகாய்களை பார்த்திருப்போம். ஒரு சிலருக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காது. அப்படியான மக்களுக்கு ஏற்ற சுவையான ஒரு மிளகாய் ஊறுகாய் ரெசிபியைத் தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.
பனாரசி சிவப்பு மிளகாய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்
- 15 பெரிய சிவப்பு மிளகாய்
- 2 டீஸ்பூன் கடுகு விதைகள்
- 3 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள்
- 2 டீஸ்பூன் வெந்தய விதைகள்
- 2 டீஸ்பூன் சீரகம்
- 7-8 கருப்பு மிளகுத்தூள்
- 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 டீஸ்பூன் மாங்காய் தூள்
- உப்பு சுவைக்க
- 1 கப் கடுகு எண்ணெய்
- 2 எலுமிச்சை சாறு
பனாரசி சிவப்பு மிளகாய் ஊறுகாய் செய்முறை:
சிவப்பு மிளகாயைக் கழுவி, உலர வைக்கவும். அவற்றின் காம்பு, விதைகள், தண்டுகளை அகற்றி, சுத்தப்படுத்தி உலர வைக்கவும். பின்னர் மிளகாயின் நடுவில் கத்தியால் கீறி தனியாக வைத்துவிடவும், பின்னர் பட்டியலில் உள்ள கடுகு, பெருஞ்சிரகம், வெந்தயம், சீரகம், மெருங்காயத்தை போன்ற மசாலாப் பொருட்களையும் வறுத்து ஆறவைத்து பொடியாக அரைக்கவும்.
இதையும் பாருங்க : பிரிட்ஜில் வைத்தாலும் பால் கெட்டுப்போகிறதா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!
உப்பு, மற்ற மசாலாப் பொடிகள், மற்றும் வறுத்து பொடியாக்கிய மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் சுமார் 4 டீஸ்பூன் சூடான கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். எல்லாம் தயாரானதும்
மிளகாயில் மசாலா பொடியை அடைத்து ஒரு கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும்.
அதன் மீது மீதமுள்ள கடுகு எண்ணெயை ஊற்றவும். இந்த மிளகாய் மசாலா கலவையை 5-6 நாட்களுக்கு சூரிய ஒளியில் வைக்கவும். மசாலா ஊறுகாயோடு ஊறிவிட்டால் காரசாரமான பனாரசி சிவப்பு மிளகாய் ஊறுகாய் ரெடி. இது அனைத்துவிதமான உணவுகளுக்கும் பொருந்தும். மழைக்காலத்தின் நாக்கிற்கு சுவை கூட்டுவதாக அமையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.