Doctor Vikatan: பழங்களை விதையுடன் சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா? | Doctor Vikatan: Does eating fruits with seeds cause digestive problems?

Share

மற்றபடி ஆரோக்கியமானவர்களுக்கு விதைகள் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு உதவும். இன்று வசதியின் காரணமாக பலரும் விதையில்லா (சீட்லெஸ்) பழங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். உதாரணத்துக்கு விதையில்லாத திராட்சைகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு தனியே ‘கிரேப்சீட் எக்ஸ்ட்ராக்ட்’ என்ற பெயரில் விதைகளின் சாரத்தை ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கிச் சாப்பிடுவோரும் இருக்கிறார்கள்.

மில்க் ஷேக்

மில்க் ஷேக்

அதே போல எந்தப் பழத்தையும் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அதை அரைத்து வடிகட்டி, கூடுதல் இனிப்பும் பாலும் சேர்த்து ஜூஸாகவோ, மில்க் ஷேக்காகவோ குடிப்பது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

மாதுளம் பழம், திராட்சை போன்றவற்றை விதைகளுடன் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டும் இந்த விஷயத்தில் கவனமாக இருந்தால் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com