Doctor Vikatan: காதின் கேட்கும் திறனைக் குறைக்குமா ஹியரிங் எய்டு? | Doctor Vikatan: Can hearing aids reduce hearing?

Share

Doctor Vikatan: ஹியரிங் எய்டு போடுவதால் காதின் உண்மையான கேட்கும் திறன் குறைந்துவிடும் என்பது சரியா? அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டுமா? ஹியரிங் எய்டு பொருத்திக்கொண்டால், ஃபாலோ அப் சிகிச்சைகள் அவசியமா? எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?

– AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

ஹியரிங் எய்டு அணிவதால் காது கேட்கும் திறன் குறைய வாய்ப்பு இல்லை; மாறாக, காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், ஹியரிங் எய்டு பயன்படுத்தாமல் இருந்தால் தினமும் அவர்கள் கேட்டு; புரிந்து கொள்ளும் பேச்சின் அளவு கணிசமாகக் குறையும், இதனால் (வார்த்தைகளை) புரிந்து கொள்ளும் மூளையின் திறன் குறைய வாய்ப்புள்ளது.

இந்தக் காரணத்தினால், ஓர் அளவுக்கு மேல் காது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு ஹியரிங் எய்டு பரிந்துரை செய்கிறோம்; அவற்றை தூங்கும் நேரம் தவிர, எந்நேரமும் போட்டுக் கொள்வது நல்லது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com