பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தச் சர்க்கரை குறைவு உண்டாவது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 30 | How do infants develop hypoglycemia?

Share

பச்சிளங்குழந்தைகளில் ஹீமோகுளோபின் அதிகரித்து, 22 gm/dL-க்கு மேலிருந்தால் அதை பாலிசைத்தீமியா (Polycythemia) என்போம். பாலிசைத்தீமியா உள்ள பச்சிளங்குழந்தைகளில், அதிக அளவு ரத்த சிவப்பணுக்களின் காரணமாக குளுக்கோஸ் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும். அதனால், ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் உள்ள பச்சிளங்குழந்தைகளில், ரத்தச் சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அட்ரீனல் பற்றாக்குறை (Adrenal insufficiency), ஹைப்போதாலமிக் குறைபாடு, பிறவி பிட்யூட்டரி குறைபாடு (Congenital hypopituitarism), குளுக்ககான் (Glucagon) குறைபாடு, அட்ரீனலின் குறைபாடு முதலிய நாளமில்லா சுரப்பிக் கோளாறுடைய பச்சிளங்குழந்தைகளில் ரத்த சர்க்கரை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாகும்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு (Hyperinsulinemic Hypoglycemia):

பச்சிளங்குழந்தைகளில் இன்சுலின் மிகையாகக் காணப்பட்டால் தீவிர மற்றும் தொடர் ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படலாம். இதன்மூலம் மூளையில் பாதிப்புகூட ஏற்படலாம். பின்வரும் பச்சிளங்குழந்தைகளில் இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

நீரிழிவு நோயுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளில் (Infant of Diabetic Mothers/ IDMs), இன்சுலின் மிகை ரத்த சர்க்கரை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்குழந்தைகளில் 48% பேருக்கு ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com