லெமன் டீ தெரியும், லெமன் காஃபி தெரியுமா? இப்போ தெரிந்து கொள்ளலாம் வாங்க

Share

தினமும் சமூக ஊடகங்களில் வித்தியாசமான தலைப்புகளில் ஏதாவது ஒன்று டிரெண்டாகி வருகிறது. அப்படி தான் லெமன் காஃபி குடித்தால் உடல் எடை மற்றும் தொப்பையை எளிதாக குறைக்கலாம் என்று கடந்த சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பேசப்படு வருகிறது. உண்மையிலேயே இது பலனைக் கொடுக்குமா? லெமன் காஃபி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது அவை அனைத்தையும் உங்களுக்கு சொல்கிறோம்.

டிக்டாக்கில் #lemoncoffee என்ற ஹேஷ்டாக் 15 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. லெமன் காஃபி குடிப்பதற்கு முன், குடித்ததற்கு பின் உள்ள மாற்றங்களை பாருங்கள் எனப் பலர் தங்கள் புகைப்படங்களை பகிர்வதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் லெமன் காஃபி குடித்தால் உடல் எடை குறையுமா? என்ற வினாவிற்கான விடையைத் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைப்பிற்கு காஃபி உதவுமா?

உண்மையில் காஃபி குடித்தால் உடல் எடை குறையுமா? கலோரி ஏதும் இல்லாத பிளாக் காஃபி சிறந்த டயட்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இதிலுள்ள கஃபைன் நம் உடலில் உள்ள டோபமைனை தூண்டுவதால், உங்கள் உடல் நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. இதனால் தன் நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காஃபி குடிக்கிறோம்.

ஆனால் இதன் முழு பலனும் கிடைக்க வேண்டுமென்றால் நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை காஃபி அருந்த வேண்டும். அப்படி குடித்தால் உங்களுக்கு பதட்டம், நீரிழப்பு போன்றவை ஏற்படும். மேலும் இந்த கஃபைன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்ச்சி சிறிது நேரமே இருக்கும். அதனால் தான் எந்தவொரு மருத்துவரும் எடை குறைப்பிற்கு காஃபியை பரிந்துரைக்க மாட்டார்கள்.

தண்ணீரில் லெமன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒன்றை நீங்கள் நியாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். லெமனில் எந்த மாய மந்திரமும் இல்லை. தண்ணீரில் வெறும் சுவைக்காகவே லெமன் சேர்க்கப்படுகிறது. தண்ணீரில் லெமனை கலப்பதால் சில சிக்கலான வேதியல் செயல்முறை நடைபெறுகிறது. ஆனால் இதில் தண்ணீர் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் தான் உங்கள் வயிற்றை நிரப்புகிறது.

வழக்கமாக உங்களுக்கு பசி எடுக்கும் போது, ஏதாவது சாப்பிடுமாறு மூளைக்கு சிக்னல் செல்லும். ஆனால் இது பல சமயங்களில் தாகத்தை ஏற்படுத்தும் சிக்னலாகத் தான் இருக்கும். பசியை போக்க நம் உடல் சாப்பிட தயாராகும் போது, நாம் வழக்கத்தை மீறி தண்ணீர் குடிப்போம். இதன் காரணமாக பசியை வெளிப்படுத்தும் சில சிக்னல்களை தடுத்து நிறுத்துகிறோம். இதனால் தான் தண்ணீரில் லெமன் கலந்து குடித்தால் உடல் எடை குறைகிறது என கூறுகிறார்கள்.

தண்ணீரில் லெமன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்கும் என பலர் கூறுகின்றனர். ஏனென்றால் ஒருவர் வழக்கமாக சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக தற்போது லெமன் கலந்த தண்ணீரை குடிக்கிறார். அதனால் தான் உடல் எடை குறைகிறது. வேறு எந்த விசேஷ காரனமும் இதில் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடல் எடை குறைக்க லெமன் கஃபி உதவுமா?

கலோரி அதிகம் இல்லாத பானத்தை காலையில் குடிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் சர்க்கரை கலக்காத பிளாக் காஃபியுடன் லெமன் சேர்த்து குடிப்பது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இதைக் குடிப்பதால் உங்கள் உடல் எடையும் குறையும். உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால் வலுக்கட்டாயமாக அதை குடிக்காதிர்கள். அதற்குப் பதிலாக படுக்கையில் இருந்து காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துங்கள். அதன்பிறகு வழகம் போல் லெமன் கலக்காத காஃபியை அருந்துங்கள்.

லெமன் காஃபி குடிப்பதால் நம் உடலுக்கு நன்மைகள் ஏற்படுமா?

ஒரு சில நன்மைகள் இருக்கிறது. ஆனால் அந்த நன்மைகளும் காஃபியில் தான் இருக்கிறது. காஃபியில் எலுமிச்சை சேர்ப்பதால் நம் உடலுக்கு குறிப்பிட்டு கூறும்படியான எந்த நன்மைகளும் கிடைப்பதில்லை. பல தலைவலி நிவாரணிகளில் கஃபைன் ஒரு பொருளாக சேர்க்கப்படுகிறது. இது ஒற்றைத் தலைவலியை போக்குவதற்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.

இதையும் பாருங்க: முகப்பருவை குறைக்க போராடுகிறீர்களா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிடுங்க.. உடனே பலன் தெரியும்..!

ஆனால் சிலருக்கு இந்த கஃபைன் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். ஆகவே உங்கள் உடல் என்ன மாதிரியான விளைவுகளை ஏர்படுத்துகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு காலையில் காஃபி குடிக்கவில்லை என்றால் தலைவலி வந்துவிடும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாக கூறலாம். காஃபியில் லெமன் சேர்ப்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

லெமன் காஃபி குடிப்பது ஆபத்தானதா?

நிச்சயமாக ஆபத்தில்லை. இருப்பினும் அதிகளவில் நாம் கஃபைனை எடுத்துக் கொள்ளும் போது தலைசுற்றல், படபடப்பு, வயிறு சம்மந்தமான பிரச்சனைகள், இதயதுடிப்பு அதிகரிப்பது, கவலை போன்றவை ஏற்படக் கூடும். மேலும் எலுமிச்சை சிட்ரஸ் வகையை சேர்ந்த்து என்பதால், இதை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com