விபத்தில் துண்டான சிறுவனின் தலை; அறுவை சிகிச்சையில் இணைத்து அதிசயிக்கவைத்த இஸ்ரேல் மருத்துவர்கள்!|Boy’s decapitated head reattached by Israeli doctors

Share

இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர்.

சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்தச் சிறுவனை காப்பாற்றியுள்ளனர். துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து அசாத்தியம் படைத்துள்ளனர்.

சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஒஹட் எய்னவ் இதை பற்றி ’இஸ்ரேல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “சிறுவனுக்கு சேதமடைந்த தலைப் பகுதியில் புதிய பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவர்களின் திறமையாலும் புதிய தொழில்நுட்பத்தாலும்தான் எங்களால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com