இரவு நேரத்தில் ஜாலியா ஒரு ‘ரைட்’ போய்விட்டு, சூடாக உணவு சாப்பிட நினைப்பவர்கள் ஏராளம். அதேபோல் இரவு காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவோரும் சாப்பிடுவதற்காக ஒரு நல்ல உணவகத்தை தேடுவார்கள்.
இத்தகைய உணவு பிரியர்களுக்காகவே கோவையில் செயல்பட்டு வருகிறது ஒரு உணவகம். லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து புலியங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘நைட் அவுட்’ (Night out) என்ற இரவு நேர உணவகம்.
ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு துவங்கப்படும் இந்த உணவகம் மறுநாள் அதிகாலை 4 மணி வரை செயல்படுகிறது. பிரியாணி வகைகள், சிக்கன், மட்டன், மீன் சில்லி மற்றும் கிரேவிகள், பரோட்டா, நான், சாண்ட்விச், பர்கர், வகைகள் மற்றும் சைவ உணவு வகைகள் இந்த உணவகத்தில் விடிய விடிய கிடைக்கிறது.
மேலும், உணவுக்கு முன் சூப் குடிக்க நினைப்பவர்களுக்கும், உணவுக்கு பின் ஒரு கூல்டிர்ங்க்ஸ் குடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற ‘ஸ்பாட்’ இந்த உணவகம். இது தவிர குழந்தைகளுக்கான கேக் வகைகள், ஐஸ் கிரீம் வகைகளும் இந்த உணவகத்தில் பரிமாறப்படுகின்றன.
கோவையில் இரவு இயங்கும் உணவகம்
இந்த உணவகத்தில் 2 சப்பாத்தி 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. பிரியாணி 250 ரூபாய் முதலும், கிரேவி வகைகள் 190 ரூபாய் முதலும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூஸ் வகைகளில் மாதுளை, சாத்துக்குடி, தர்பூசணி ஜூஸ் மட்டும் கிடைக்கிறது.
ஊரே உறங்கும் நள்ளிரவில் சுடச்சுட, வித விதமான உணவு வகைகளை ருசிக்க நினைப்பவர்கள் இந்த உணவகத்திற்கு ஒரு ‘விசிட்’ அடிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.