குழந்தைகளுக்கு சுவையோடு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பீட்ரூட் கட்லெட்.. ஈஸியா செய்வதற்கான டிப்ஸ்..!

Share

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்று தான் கட்லெட். சிக்கன், வெஜ், காளான் என கட்லெட் ரெசிபிகள் பல வகைகளில் உள்ளன. இவற்றில் ஒன்று தான் பீட்ரூட் ரெசிபி. இனிப்புச்சுவையோடு பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலோட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

எனவே நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கட்லெட் ரெசிபியை டிரை பண்ணிப்பாருங்கள்.. இதோ எப்படி செய்யலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

பீட்ருட் கட்லெட் ரெசிபி செய்முறை:

தேவையான பொருள்கள்: 

  • பீட்ரூட் – 1
  • முந்திரி பருப்பு, திராட்சை தேவைக்கு ஏற்ப
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • சீரகத்தூள் – ½ ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
  • வேக வைத்த உருளைக்கிழங்கு- 1
  • வேக வைத்த பச்சை பட்டாணி – அரை கப்
  • நறுக்கிய கொத்தமல்லி இலை- சிறிதளவு
  • மைதா அல்லது சோள மாவு – 2 ஸ்பூன்
  • பிரட் தூள்
  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப

செய்முறை:

  • முதலிட் பீட்ரூட்டின் தோலை சீவி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுக்கவும். இதையடுத்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  • பின்பு பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கியதும் உப்பு, சீரகத்தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் வதங்கியதும் உருளைக்கிழங்கையும் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் வதக்கிய பொருள்களை மாற்றி அதனுடன் வேக வைத்த பட்டாணி மற்றும் கொத்த மல்லி இலை சேர்த்து கலக்கிக்கொள்ளவும். இதை கட்லெட் போன்று வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்டை மைதா மற்றும் பிரட் தூளில் போட்டு எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் போதும் சுவையான பீட்ரூட் கட்லெட் ரெடி.
  • இதை நீங்கள் புதினா சட்னி அல்லது மயோனைஸ் வைத்து சாப்பிட்டால் உங்களுக்கு கூடுதல் ருசியைக்கொடுக்கும்.
  • நீங்கள் சுவையான கட்லெட் வர வேண்டும் என்று நினைத்தால், முன்னதாகபீட்ரூட்டை மிகக் குறைந்த தீயில் வேகவைக்கவும். இல்லையென்றால் இதன் நிறத்தை இழந்துவிடும்.

Also Read | கீரை – உருளைகிழங்கு வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாமா..?

இனி கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே ஈஸியா இந்த டிப்ஸைப் பயன்படுத்தி கட்லெட் ரெசிபியை செய்து சாப்பிடுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com