அதில், ‘தற்காலிகமாகத் தக்காளி கிடைக்காது’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தகவலில், “தக்காளியை வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உணவுப்பொருள்களைத் தக்காளி இல்லாமல் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களால் முயன்றும் தேவையான அளவு தக்காளி தரமானதாகக் கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாகத் தக்காளி இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது. தக்காளியைப் பெற நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டரில் இந்தத் தகவலை 80,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதோடு தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை மட்டுமல்லாது, மிளகாய், இஞ்சி, காலிபிளவர் போன்றவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.