வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ப்பா ..இவர்கள் ரொம்ப பர்ஃபெக்ட். இவர் செய்யும் காரியங்கள் எல்லாம் தனித்துவமாக இருக்கும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே..? என்னால் அது போல் பர்ஃபெக்ட்டாக எதிலும் இருக்க முடியவில்லையே ன்னு அங்காலய்பவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி. சமீபத்தில் என் தோழியின் மருமகளை மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது அப்போது என் கையைப் பிடித்துக் கொண்டு ஆன்ட்டி எப்படி இருக்கிறீர்கள் ஆன்ட்டி உங்களிடம் வெகு நாட்களாக கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வியை வைத்திருந்தேன் .இப்போது கேட்கலாமா ?என்றாள்.
கேள் இலக்கியா என்றேன்.
ஏன் ஆன்ட்டி என்னால் என் அத்தையை போல் பர்ஃபெக்ட் ஆக இருக்க முடியவில்லை.. நான் செய்யும் வேலைகள் எல்லாம் அரைகுறையாக தான் தெரிகிறது அப்படி இப்படின்னு ஒரே புலம்பல் ஸ் . அவளை சற்றே ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து,
அன்பு மகளே இலக்கியா… இது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை எதற்காக அவள்?
கண்ணைத்துடைத்துக் கொள்.
இப்ப நீ ஒரு பில்டர் காபி போடற.. அல்லது பிள்ளைகளின் புத்தகங்களுக்கு அட்டை போடுற.. அல்லது வாசலில் அழகாக ரங்கோலி போடுற.. அல்லது மாடித் தோட்டத்தை சுத்தம் செய்ற…. இப்படி நீ செய்யும் எந்த வேலைகளிலும் உன் அர்ப்பணிப்பும் ரசனையும் 100% சரியாக இருக்கிறதா? என்று யோசித்திருக்கிறாயா?